மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு !!!மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை 19 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.695க்கு விற்கப்பட்ட நிலையில், இனிமேல் 714 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.
மும்பையில் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.695 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவில் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.21.50 பைசா உயர்ந்து, ரூ.747 ஆகவும், சென்னையில் ரூ.20 உயர்ந்து, ரூ.734 ஆகவும் உயர்ந்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments