கோட்டைபட்டிணத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்..!புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் இலங்கை தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் வஞ்சிக்கும் விதமாக மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை  எதிர்த்து வரும் 03.01.2020 வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கோட்டைப்பட்டிணம் ஜமாத்தார்கள்,உலமாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 03.01.2020 வெள்ளிக்கிழமை மதியம் 3.00 மணியளவில் கோட்டைப்பட்டிணம் M.K நிஷா  மண்டபத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு கடை வீதி வழியாக சென்று செக் போஸ்ட் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதுசமயம் இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதி ஜமாஅத், பொதுமக்கள், சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோட்டைப்பட்டிணம் முழங்கட்டும்!
டெல்லி அதிரட்டும்!
உரிமைக்கான போராட்டத்தில் உணர்வுள்ள சகோதரர்கள் இணையட்டும்!

அனைவரும் அணிதிரண்டு கோட்டைப்படிணத்தை நோக்கி வாரீர்...!!

இப்படிக்கு,
ஊர் பொதுமக்கள்,
கோட்டைப்பட்டிணம்.

தகவல் : சல்மான், கோட்டைப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments