நீட் தேர்வு முடிவுகள் வரும் 31-ம் தேதி வெளியீடு



மருத்துவப் பட்டமேற்படிப்புக ளுக்கு கடந்த 5-ம் தேதி நடை பெற்ற நீட் தேர்வு முடிவுகள் வரும் 31-ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்பு களான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.


தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு www.nbe.edu.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் நிறைவடைந்தது. நாடுமுழுவதும் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு பணியாற்றி வரும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் மருத்துவப் பட்டமேற்படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.

தமிழகத்தில் இருந்து மட்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தனர். நீட் தேர்வு கடந்த 5-ம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடுமுழுவதும் 162 நகரங்களில் நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் 31-ம்தேதி வெளியிடப்படுவதாக தேசிய தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments