கிராமசபை கூட்டம் அறிவிப்பு சம்மந்தமாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை..!




தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 - ன் படி, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 02 ஆகிய தேதிகளில் கட்டாயம் கிராமசபை கூட்டம் நடைபெற வேண்டும்.
அவ்வாறு கூட்டத் தவறினால் ஊராட்சி தலைவர் மீது, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 205-ன் படி நடவடிக்கை எடுத்து அவரை பதவி நீக்கம் செய்வதற்கு வழிவகை உள்ளது. மேலும், கிராமசபை கூட்டம் நடத்த முடிவு செய்த தேதிக்கு ஒருவாரம் முன்னதாகவே அதுபற்றிய அறிவிப்பு செய்ய வேண்டும். துண்டுப் பிரசுரம், ஒலி பெருக்கி மூலம் விளம்பரம் செய்ய வேண்டும்.


வீணாக பொழுதையும் ,நமது வரிப்பணத்தையும்
வீணாக்கலாமா?? வீணாக்க விடலாமா??
நம் பலவீனத்தை பிறர் லாபமாக்க விடலாமா??

சிந்திப்போம்!! நாளைய தலைமுறைக்காக!!

சில மணி நேரம்
கிராம நலனுக்காக ஒதுக்குங்கள்!!

திட்டமிடுங்கள்
கிராம நலன்சார்ந்த வளர்ச்சிக்காக...
உங்கள் உள்ளாட்சி பிரதிநிகளுடன்
கிராமசபையில்....

நமது கிராமம் 
நமது அடையாளம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments