புதுக்கோட்டை ஜமாத்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற 71-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.!




புதுக்கோட்டை ஜமாத்துல் உலமா சபை சார்பில் 71-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்திய திருநாட்டின் 71-வது குடியரசு தின விழா புதுக்கோட்டை நகர முஸ்லீம்கள் சார்பில் கோலகலமாக நடத்தப்பட்டது.


புதுக்கோட்டை வட்டார ஜமாத்துல் உலமா சபை, இஸ்லாமிய இளைஞர் நலப் பேரவை சார்பில் இந்திய திருநாட்டின் 71-வது குடியரசு தின விழா திருவள்ளுவர் நகர் ஆயிஷா ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வட்டார ஜமாத்துல் உலமா சபை தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஸதக்கத்துல்லாஹ் தலைமை வகித்தார். 

சந்திரசேகரன். பாலமுருகன்.மணிகண்டன், மாரியப்பன், மாரிமுத்து, சி.ஆறுமுகம், சுப.காந்திநாதன், மானிக்கம், ஜனார்த்தனன், ராமச்சந்திரன்.டேவிட் தேசிங், எம்.ஆறுமுகம், முருகானந்தம் மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் பெரிய பள்ளிவாசல் செயலாளர் அல்ஹாஜ் என்.ராஜா தாஜ் முஹம்மது வரவேற்றார்.


மாவட்ட அரசு ஹாகி அல்ஹாஜ் என்.எம்.அமானுல்லாஹ் இந்திய தேசியக் மூவர்ணக் கொடியை ஏற்றி பறக்க விட்டார். விழாவின் தொடர்ச்சியாக தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி மற்றும் தேசிய உறுதி மொழி வாசிக்கப்பட்டு தேசிய ஒருமைப்பாடு குறித்து கலீல் நகர் இமாம் அப்துல் காதிர் ஜீலானி சிறப்புரையாற்றினார். நிறைவாக திருவள்ளுவர் நகர் பள்ளிவாசல் செயலாளர் அல்ஹாஜ் நைனா முகம்மது நன்றியுரையாற்றினார். விழாவில் முஸ்லீம்கள் மற்றும் இந்து, கிறிஸ்துவ மதத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்க சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர். விழாவினை வட்டார ஜமாத்துல் உலமா சபை, இஸ்லாமிய இளைஞர் நலப்பேரவையினர் செய்திருந்தனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments