நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டம்..!



71 ஆவது இந்திய குடியரசு தின விழா கோபாலப்பட்டிணத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிராமத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள், பள்ளிவாசல் மற்றும் பொதுநல சங்கங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவில் அமைந்துள்ள நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் கிராம சபா கூட்டம் நேற்று 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஊராட்சிமன்ற துணைத்தலைவர் J.அபுதாஹீர் அவர்கள் தலைமையிலும் ஒன்றிய கவுன்சிலர் கமர்நிஷா அபுதாஹீர் அவர்கள் முன்னிலையிலும் கிராம சபை கூட்டம் கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பள்ளிவாசல் அருகில் உள்ள ஆலமரத்தடியில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கிராமத்தின் வளர்ச்சிக்கு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு ஆலோசனைகள் கேட்கப்பட்டது.


இந்த கூட்டத்தில் வருவாய்துறை சார்பில் தலையாரி அவர்களும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊர் நல அலுவலர் RWO அவர்களும், தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குச்சாவடி நிலைய அதிகாரியும் மற்றும் மீன்வளத்துறை சார்பில் ஐபேடு என்ற தனியார் நிறுவன ஊழியர்கள் என அரசு சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். 


இந்த கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக் கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை வாய்மொழியாகவும் மற்றும் ஒரு சில இயக்கங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுவாகவும் கொடுத்தனர்.

இறுதியாக ஊராட்சி செயலர் மதி அவர்கள் நன்றி கூறினார்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராமசபை நடைபெறும் இடத்தில் இடம், நேரம் குறிப்பிட்டு பேனர் தொங்கவிடப்பட்டிருந்தது. ஆனால் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் அதுபோல் எதுவும் செய்யப்படவில்லை. 

குறிப்பு: நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கிராமசபை சம்மந்தமாக கடந்த 24.01.2020 இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அறிவிப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சரியான முறையில் மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எந்த ஒரு அறிவிப்பும் செய்யப்படவில்லை. எனவே இனி வரும் காலங்களில் கிராமசபை நடைபெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு செய்திடவும் மற்றும் ஒலி பெருக்கி மூலம் விளம்பரம் செய்ய வேண்டி பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.



தகவல்: GPM மீடியா குழு.,
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments