புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமாமகேஸ்வரி பார்வையிட்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது: கிராமப்புற பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருமயம் ஊராட்சி ஊராட்சியில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுமான பணிகள் பார்வையிடப்பட்டது. குறிப்பாக ஏழை, எளிய மக்களின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் கட்டி தரப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 13,060 பசுமைவீடுகள் ரூ.262 கோடி மதிப்பீட்டில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதில் 12,006 வீடுகள் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,054 பசுமை வீடுகள் கட்டும் பணி விரைவில் நிறைவு பெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக பேரையூர், கே.பள்ளிவாசல், துலையானூர் ஆகிய 3 ஊராட்சிகளில் 4 சமுதாய பொது கிணறுகள் ரூ.42.88 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர மாவட்டம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 20 தனிநபர் கிணறுகள் தலா ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.1.20 கோடியில் மதிப்பீட்டில் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது வரை 16 பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணி நிறைவடைந்துள்ள திருமயம் ஒன்றியம், அரசம்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 3 தனி நபர் கிணறுகளும் பார்வையிடப்பட்டது. மேலும் திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், அங்கன்வாடி கட்டிடப்பணிகள், தடுப்பணைகள், சாலையோர தடுப்புசுவா;கள், கழிவுநீர் வாய்க்கால்கள் உள்ளிட்ட 13 பணிகள் ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை பார்வையிடப்பட்டது. நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு, உரிய கால அளவில் பணிகளை முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.