சவூதியில் தவித்த தமிழரை மீட்டு தமிழகம் அனுப்பிய தமுமுக மற்றும் தன்னார்வ அமைப்புகள்



கடந்த நான்கு ஆண்டு காலமாய் சவூதி அரேபியாவிலிருந்து தாயகம் செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்த தமிழரை அனைத்து தன்னார்வ தொண்டு அமைப்புகளும் ஒருங்கிணைந்து சட்ட ரீதியான உதவிகள் செய்து தாயகம் அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தை சேர்ந்த நாகை மாவட்டத்திற்குட்பட்ட புதூர் சேர்ந்த ரியாஸ் எனும் சகோதரர் சவுதி அரேபியாவில் வீட்டு ஓட்டுனர் வேலை செய்து வந்தார்.  நான்கு வருடங்களுக்கு முன்பு  சகோதரர் ரியாஸ் அவர்கள் தான் பணி செய்யும் குடும்பத்தினரை  தொலைதூரப் பயணம் அழைத்து சென்றார். அப்பயணத்தில் திடீரென்று ஏற்பட்ட   விபத்தினால் தனக்கு அருகில் பயணித்த மற்றொரு வாகனத்தில்  மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தினால் இவருக்கு அருகில் வந்த வாகனம் மிகுந்த சேதமடைந்ததுடன் அதில் பயணித்த குடும்பத்தினர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது.  விபத்திற்கான இழப்பீடாக ரியாஸ் அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 15 லட்ச ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் செய்வதறியாமல் திகைத்து கொண்டிருக்கும் போது ரியாஸ் அவர்களின் குடும்பத்தினர் ம ம க  தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் அவர்களை தொடர்பு கொண்டு அவர் மூலம் ரியாத் மண்டல தமுமுக தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரியாஸ் அவர்களை மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் ரியாத் மண்டல சமூக நலத்துறை மூலம் பல்வேறுபட்ட சட்ட முன்னெடுப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சட்ட ரீதியான சிக்கல்கள் மிக அதிகமாக இருந்த காரணத்தினால் ரியாஸ் அவர்களை மீட்டெடுப்பது மிகுந்த சிரமத்திற்குள்ளானது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமுமுக ரியாத் மண்டல சமூக நலத்துறை துணைச் செயலாளர் அறந்தை சித்திக் அவர்களின் பொறுப்பின் கீழ் ரியாத்தில் உள்ள அனைத்து தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ரியாஸ் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், அன்றை ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சகோதரர் ரியாஸ் அவர்களை மீட்டெடுக்கும் பணிகளை துரிதப்படுத்தி மேலும் சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டு ரியாஸ் அவர்களை மீட்டெடுத்தனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சகோதரர் ரியாஸ் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டார் .

ஒப்பற்ற இந்த மனிதநேய பணியை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தன்னார்வ அமைப்புகளுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் இதற்காக உழைத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் ரியாத் மத்திய மண்டல தமுமுக சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் உங்களது இந்த அர்ப்பணிப்பை ஏற்றுக் கொள்வானாக! என்று பிரார்த்திக்கிறோம்.

மேலும் உன்னதமான மனிதநேயமிக்க இப்பணியை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மேற்கொண்டு சகோதரர் ரியாஸ் அவர்களை தாயகம் அனுப்பி வைத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ரியாத் மத்திய மண்டல சமூக நலத்துறையை சேர்ந்த அறந்தை சித்திக் அவர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் சகோதரர் கோட்டை இம்ரான் அவர்களுக்கும் மற்றும் இதற்காக உழைத்திட்ட உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் ரியாஸ் அவர்களும் அவரது குடும்பத்தினரும் உளமார  நன்றி கூறினார்கள்.

தகவல் : தமுமுக ஊடகப்பிரிவு
ரியாத் மண்டலம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments