
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர் தோல்வி..! விரக்தியில் வீதி வீதியாக ஒட்டிய போஸ்டர்
தமிழகத்தில் 2 கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். 27 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி 2 நாட்களாக நடைபெற்றது.
மேற்கு மாவட்டங்களில் அதிமுகவும், தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் திமுகவும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அற்கான சான்றிதழ் பெற்றுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டுவது ஒருபுறமிருக்க தோல்வியடைந்தவர்களும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் “காசு வாங்குன ஓட்டுப்போட்டாயா“ என்று பெயர் குறிப்பிடாத வேட்டபாளர் ஒருவர் பணம் வாங்கிய வாக்காளர்களை திட்டி போஸ்டர் ஒட்டியுள்ளார்.
தேர்தல் விதிமுறைப்படி ஒட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் குற்றமாகும். ஆனால் வாக்காளர்கள் கொடுத்த பணத்திற்கு ஓட்டுப் போடவில்லை என்று வேட்பாளர் ஒருவர் திட்டி போஸ்டர் ஒட்டி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கோட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.