அடடே..! வேட்டி கட்டினால் பிரியாணியா..?வேட்டி கட்டினால் பிரியாணி இலவசம்... சென்னையில் பிரபல பிரியாணி கடை அசத்தல் ஆஃபர்..!
உலக வேட்டி தினத்தை முன்னிட்டு வேட்டி கட்டி வரும் முதல் 50 நபர்களுக்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று அறிவித்து..?

கைத்தறி நெசவு தொழிலை காப்பாற்றும் விதமாகவும், இளைஞர்களிடம் வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஜனவரி 6ம் தேதி உலக வேட்டி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வேட்டி தினம் கொண்டாட்டம் குறித்த சரியான வரலாற்று தகவல்கள் கிடைக்காத நிலையில், 2015 ஆம் ஆண்டு கோ ஆப் டெக்ஸ் நிறுவன செயல் இயக்குனராக இருந்த ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் பொங்கலை ஒட்டி ஜனவரி 6 ஆம் தேதி உலக வேட்டி தினம் கொண்டாட முன்மொழிந்தார். அன்று முதல் ஜனவரி 6 ஆம் தேதி உலக வேட்டி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்நிலையில், வேட்டி தினத்தை வித்தியாசமாக கொண்டாட புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னையில் ஒரு பிரியாணி கடை. காதலர் தினத்தன்று முரட்டு சிங்கிளுக்கு பிரியாணி இலவசம், தண்ணீர் பஞ்சத்தின் போது பிரியாணிக்கு தண்ணீர் இலவசம் போன்ற வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிடும் தொப்பி வாப்பா பிரியாணி கடை தற்போதும் ஒரு வித்தியாச அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

      அதாவது, ஜனவரி 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெள்ளை வேட்டி அணிந்து வரும் முதல் 50 நபர்களுக்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று அறிவித்துள்ளது. மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் விதமாக, ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கைத்தறி வேட்டி, துண்டு இலவசம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments