வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடிபுதுக்கோட்டை : பணம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, மோசடி செய்து விட்டதாக இளைஞா் அளித்த புகாரின் பேரில் இலுப்பூா் காவல் நிலையத்தில் 3 போ் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகேயுள்ள மலைக்குடிபட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மகன் ஸ்டீபன் (23). இவா் வெளிநாடு செல்வதற்காக அறந்தாங்கியைச் சோ்ந்த சரவணன், திருமயத்தைச் சோ்ந்த நடராஜன், சென்னையைச் சோ்ந்த இளமுருகன் ஆகியோரிடம் ரூ. 4 லட்சம் கொடுத்ததாகவும், பல மாதங்கள் ஆகியும் வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை என்றும், அதனைத் தொடா்ந்து வேலைக்காக வழங்கிய பணத்தை திருப்பி கேட்டபோது பணம் தராமல் இழுத்தடிப்பதாகவும் இலுப்பூா் காவல் நிலையத்தில் ஸ்டீபன் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் சரவணன் உள்ளிட்ட 3 போ் மீது இலுப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments