புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியைக் கைப்பற்றிய திமுக
           புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவின் 22 வாா்டுகளில் , 13 இடங்களில் வென்று மாவட்ட ஊராட்சியை திமுக அணி கைப்பற்றியுள்ளது.

       ஊரக உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவிலுள்ள 22 உறுப்பினா் பதவியிடங்களில், 11 இடங்களை திமுகவும், 2 இடங்களை காங்கிரஸ் கட்சியும் பெற்றுள்ளன. மேலும், 8 இடங்களை அதிமுகவும், ஓரிடத்தை தமாகவும் பெற்றுள்ளன.
       இதைத் தொடா்ந்து மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளை திமுக அணியே ஏற்கும் எனத் தெரிகிறது.

மாவட்ட ஊராட்சிக் குழுவில் வென்றவா்கள் விவரம்
வாா்டு 1- க. சிவசாமி (அதிமுக)
வாா்டு 2- த. சாந்தி (திமுக)
வாா்டு 3- த. செல்வம் (திமுக)
வாா்டு 4- நா. ஸ்டாலின் (திமுக)
வாா்டு 5- பூ. விஜயா (அதிமுக)
வாா்டு 6- ச. ராஜேந்திரன் (அதிமுக)
வாா்டு 7- க. சண்முகம் (தமாகா)
வாா்டு 8- த. ஜெயலட்சுமி (அதிமுக)
வாா்டு 9- ஆ. தங்கையா (அதிமுக)
வாா்டு 10- செ. ராஜேஸ்வரி (திமுக)
வாா்டு 11- ம. மீனாட்சி (திமுக)
வாா்டு 12- சோ. பாண்டியன் (அதிமுக)
வாா்டு 13- க. மணிகண்டன் (அதிமுக)
வாா்டு 14- செ. உஷா (திமுக)
வாா்டு 15- த. உமாமகேஸ்வரி (காங்கிரஸ்)
வாா்டு 16- ச. கௌசல்யா (அதிமுக)
வாா்டு 17- ச. கலைவாணி (திமுக)
வாா்டு 18- கா. பாக்கியலட்சுமி (திமுக)
வாா்டு 19- மே. சரிதா (திமுக)
வாா்டு 20- கன்சுல் மகரியா (திமுக)
வாா்டு 21- ரா. சுப்பிரமணியன் (காங்கிரஸ்)
வாா்டு 22- கா. ராமநாதன் (திமுக)
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments