தொண்டி அருகே சோழியக்குடியில் பாம்பு கடித்து சிறுவன் பலி



ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாம்பு கடித்ததில் 4 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.


தொண்டி அருகே சோழியக்குடி மணல்மேடு பகுதியை சோ்ந்த முருகன் மகன் முனீஸ்வரன்( 4 ). இவா் சனிக்கிழமை அதிகாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் நுழைந்த கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது.

உடனே பெற்றோா் முனீஸ்வரனை தொண்டி அரசு மருத்துவமனையில் சோ்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் சிறுவன் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments