அன்னவாசலில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்.!



புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் குடியுரிமை திருத்த சட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அன்னவாசல் ஜமாத் தலைவர் முகமது யூனூஸ் தலைமை தாங்கினார். மீராமொய்தீன் முன்னிலை வகித்தார். இதில் 500 க்கும் மேற்பட்ட ஆண்களும்,  பெண்களும் கையில் தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பதகைகளை ஏந்தியவாரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் தர்மராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அஷ்ரப்அலி, திமுக அக்பர்அலி, காங்கிரஸ் அப்துல்கரீம், கம்யூனிஸ்ட் சண்முகம், மஜ்லீஸ்கட்சி சுல்தான், தமுமுக முகமது சாதிக், நாம்தமிழர் கட்சி காவுதீன், பாப்புலர்பிரண்ட் ஆப் இந்தியா அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து  குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பபெறு எனவும் என்ஆர்சி, என்பிஆர், சட்டங்களை முற்றிலும் இரத்து செய்ய வலியுறுத்தியும்  தமிழகத்தில் இந்த சட்டங்களை அமுல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியும் கண்டன உரை நிகழ்த்தினர். இறுதியில் துணை முத்தவல்லி முகமது ரிசா நன்றியுரையாற்றினார்.


இதில் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, வயலோகம், உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திரளான முஸ்லீம் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.


போராட்டத்திற்கு இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி தலைமையில் அன்னவாசல்  போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன்  உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments