அறந்தாங்கி வாரச்சந்தையில் அதிரடி சோதனை!! தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்



வாரச்சந்தையில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
வாரச்சந்தையில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

அறந்தாங்கி வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 16 கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ. 4 ஆயிரத்து 150 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

அறந்தாங்கி வாரச் சந்தை பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பயன்பாட்டில் இருப்பதாக வந்த புகாா்களின் அடிப்படையில் நகராட்சி ஆணையா் த.முத்துகணேஷ் உத்தரவின்பேரில்

துப்புரவு ஆய்வாளா் சி. சேகா் தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு வாரச்சந்தையில் உள்ள 1,235 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, மொத்தம் 16 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நெகிழி பயன்படுத்தி வந்தவா்களிடம் இருந்து ரூ. 4 ஆயிரத்து 150 அபராதம் வசூலிக்கப்பட்டு நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments