5 மற்றும் 8-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை ரத்து செய்ய கோரி குடியரசு தின கிராம சபை கூட்டங்களில் தீர்மான நிறைவேற்றுக.. GPM மீடியா அறிக்கை...



தமிழக அரசு தற்பொழுது 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ளது. எனவே வருகின்ற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தில் மாணவர்கள் நலன் கருதி 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.


இச்சபையினால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்களை உரிய இலாக்காவுக்கு அதிகாரிகள் அனுப்பி வைப்பர்.

அந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கைகள் எடுப்பது என்பது, ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு ஒப்பாக கருதப்படும் அந்தஸ்த்தை பெற்றதாகும்.

இதனால் அங்கு நிறைவேற்றிய தீர்மானங்களில் 80 சதவீதம் செயல் முறைக்கு வந்துள்ளன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாசங்களின் அடிப்படையில் தீர்மானங்களை நிறைவேற்றுங்கள்:



எனவே நமதூர் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தில் 12, 618 கிராம ஊராட்சிகளின் கிராம சபை கூட்டங்களில் மக்கள் வெகுவாக கலந்துக்கொண்டு மாணவர்கள் நலன் கருதி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என GPM மீடியா சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்... தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்!

மாணவர்கள் நலன் கருதி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


சிவகங்கையில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயற்குழுவில், "5 மற்றும் 8- ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகில் எந்த நாட்டிலும் 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது நடைமுறையில் இல்லை. இத்தேர்வு அறிவிப்பின் மூலம் சின்னஞ்சிறு மாணவர்கள் மத்தியில் தேர்வு பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராப்புற ஏழை, எளிய மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இடைநிற்றல் அதிகரிக்கும். 

இதனால் மாநிலத்தின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படும். எனவேதான் கல்வியாளர்களும், உளவியல் நிபுணர்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பைப் தெரிவித்து வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலும், எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பது புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி கொண்டு வரப்பட்ட திட்டமாகும். எனவே தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்னும் திட்டத்தை மாணவர்கள் நலன் கருதி உடனடியாக கைவிட வேண்டும்." என மாணவர்கள் நலன் கருதி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வருகின்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. 

மாவட்டத் துணைத்தலைவர் மாலா தலைமையில் நடைப்பெற்ற இச்செயற்குழுக் கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகிக்க, மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசியது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments