மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்.!



மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்), தேதிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகிய சட்ட திருத்தங்களை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நேற்று 30.01.2020 மாலை 4.30 மணியளவில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக  புதுக்கோட்டை மாவட்டம் ECR (கிழக்கு கடற்கரை) சாலையில் கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மணமக்கள் திருமணம் முடிந்த கையுடன் மனித சங்கிலி போராட்டத்தில் 

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டினை கைவிட கோரியும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

தமிழக ஒற்றுமை மேடையின் சார்பில் மீமிசல் கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கோபாலப்பட்டிணம், மீமிசல், SP.மடம், மீமிசல், ஆர்.புதுப்பட்டினம், ஏம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர்.


மீமிசல் உப்பளம் முதல் மீமிசல் கடைவீதி வழியாக தபால் நிலையம், காவல் நிலையம், SBI வங்கி, ICICI வங்கியை கடந்து பஜாஜ் ஷோரூம், SP மடம் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கு மேல் மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார ஊர் பொதுமக்கள், பெண்களும் கலந்து கொண்டு குடியுரிமை மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மணமக்கள் திருமணம் முடிந்த கையுடன் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெற்ற CAA, NRC, NPR-க்கு எதிரான போராட்டத்தில் மீமிசல் கடை வீதியில் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments