உள்ளாட்சித் தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மணமேல்குடி ஒன்றியம் திமுக வேட்பாளர் வெற்றிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணமேல்குடி ஒன்றியம் 20வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட 16 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தமிழக அளவில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றி உள்ளது அங்கு திமுக 14 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது.


இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட 20-வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் கன்சூல் மகரிபா அதிமுக சார்பில் சித்தி பரிதா இவர்கள் தவிர சுந்தராம்பாள் ரம்ஜான் தேதி ஆகியோரும் போட்டியிட்டனர். இங்கு 31,354  வாக்குகள் பதிவானது இதில் திமுக வேட்பாளர் கன்சூல் மகரிபா 21720 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் சித்தி பரிதா 5746 வாக்குகளும் சுந்தராம்பாள் 2159 வாக்குகளும் ரம்ஜான்  பீவி 677 வாக்குகளும் பெற்றனர்.

திமுக வேட்பாளர்  கன்சூல் மகரிபா அதிமுக வேட்பாளர் விட 15 ஆயிரத்து 924 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர்  கன்சூல் மகரிபா தமிழக அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments