ஆவுடையார்கோவில் ஒன்றிய கவுன்சிலர்கள் நாளை பதவியேற்பு..!



27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சி வார்டு மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்கின்றனர்.


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்கள் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 15 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை 06.01.2020 திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக பதவியேற்க உள்ளனர்.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலும், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக, முதலில் மூத்த உறுப்பினர் பதவியேற்க வேண்டும். அவர்கள் முன்னிலையில் மற்ற உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மறைமுகத் தேர்தல் மேலும், 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 515 உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அந்தந்த மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்கள், துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் ஜன. 11-ம் தேதி நடைபெற உள்ளது.

அதேபோல், 314 ஊராட்சி ஒன்றியங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆயிரத்து 90 உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஒன்றியக்குழு துணைத் தலைவர்களையும் அன்றே தேர்ந்தெடுக்க உள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments