நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு..!



தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் டிச- 27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜனவரி இரண்டாம் தேதி நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேற்று ஜனவரி 6ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றனர்.


புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி ரா.சீதாலெட்சுமி பஷீர் அஹமது அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராகவும், அதனைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர்களாக 
1-வது வார்டு - ஜெ.அபுதாஹிர் (போட்டி இன்றி தேர்வு), கோபாலப்பட்டிணம்.

2-வது வார்டு - இ.சித்திநிஜாமியா, கோபாலப்பட்டிணம்.

3-வது வார்டு - அ.அபுதாஹீர், கோபாலப்பட்டிணம்.

4-வது வார்டு - அ.மும்தாஜ் பேகம், கோபாலப்பட்டிணம்.

5-வது வார்டு - மு.ரஜபு நிசா, கோபாலப்பட்டிணம்.

6-வது வார்டு - சா.பெனாசிா் பேகம், கோபாலப்பட்டிணம்.

7-வது வார்டு - அ.சாதிக் பாட்சா, கோபாலப்பட்டிணம்.

8-வது வார்டு - மு.அன்வர் பாட்சா, R.புதுப்பட்டிணம்.

9-வது வார்டு - ரெ.மல்லிகா, (போட்டி இன்றி தேர்வு), R.புதுப்பட்டிணம்.

10-வது வார்டு - க.சிங்காாி, R.புதுப்பட்டிணம்.

11-வது வார்டு - சா.லத்திப், முத்துக்குடா.

12-வது வார்டு - சு.பிரேமா, (போட்டி இன்றி தேர்வு), முத்துக்குடா 

ஆகியோர் நேற்று 06.01.2020 காலை 10.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உறுதி மொழி எடுத்து பதவியேற்றுக் கொண்டனர்.

இப்பதவியேற்பு விழாவில் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள், மீனவ சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மக்களால் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றிருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்தும் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த கிராமாக திகழ லஞ்சம் மற்றும் ஊழலற்ற பணி செய்ய GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.





கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments