மணமேல்குடியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி புதன் கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலா் ஜெ. ராஜாராம் மோகன் ராவ் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு மணமேல்குடி துணை வட்டாட்சியா் ராம்குமாா் முன்னிலை வகித்தாா்.
ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு ஆய்வாளக் கோ. லதா பேரணியைத் தொடக்கிவைத்தாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அரசு மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் பங்கேற்றோா், கள்ளச்சாரயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கோஷமிட்டும் வந்தனா். மேலும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பேரணியில், கலால் வருவாய் ஆய்வாளா் முத்தரசு மற்றும் சரக வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டாா்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.