புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, மீமிசலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் 18.01.2020 சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டன பேரணியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த பேரணி 18.01.2020 சனிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் நுழைவு வாயிலில் இருந்து துவங்கி மீமிசல் முக்கிய கடைவீதி வழியாக சென்று மீமிசல் சந்தைப்பேட்டை வந்தடைந்ததும், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் ஜனாப். கே.எம். சரீப் M.A, தலைவர்-தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அவர்களும், திரு. திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம் அவர்களும், திரு. அய்யாவழி P.பாலமுருகன், நிறுவனர் அய்யா தர்மயுகவழி பேரவை அவர்களும், திரு குடந்தை அரசன், தலைவர் -விடுதலை தமிழ் புலிகள் கட்சி அவர்களும், அருட்திரு. ஜேசுராஜ் அடிகளார், பாதிரக்குடி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த மாபெரும் பேரணியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையில் தேசியக் கொடியுடன் பேரணியாகச் சென்று தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.