மீமிசலில் முதலுதவி அளிப்பது குறித்த விழிப்புணர்வு...



புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல் நிலையத்தில் அவசர கால முதலுதவி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.


மீமிசல் காவல் நிலையம் சார்பில் விபத்து காலத்தில் முதலுதவி குறித்து 27.01.2020 திங்கள்கிழமை அன்று  மீமிசல் காவல் நிலையம் துணை ஆய்வாளர் செல்வம் அவர்களின் முன்னிலையில் மீமிசல் காவல் நிலையம் அருகில் பொதுமக்களுக்கு கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசாருதீன் அவர்கள் முதலுதவி குறித்து விளக்கினார்.

பின்னர் அவசரகால சிகிச்சை நேரங்களில் எது செய்ய வேண்டும், எது செய்ய கூடாது  மற்றும் எவ்வாறு துரிதமாக செயல்படுவது உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.

இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்காக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மீமிசல் காவல் நிலைய காவல் ஆய்வாளர்களுக்கு எங்களுடைய GPM MEDIA சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் கடந்த 19.10.2019 அன்று பொதுமக்களின் சேவைக்காக அர்பணிக்கப்பட்டு இதுநாள் வரை பல உயிர்களை காப்பாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments