புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்..



புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி,இ.ஆ.ப., அவர்கள் புதுக்கோட்டையில் நேற்று (22.01.2020) துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது.

கிராம ஊராட்சிகளில் ஊராட்சிமன்ற தலைவர்கள் முதன்மை நிர்வாக அதிகாரி ஆவர். அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சிமன்ற தலைவருக்கும் நிதி பயன்பாடு, தணிக்கை, கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கடமைகள் உள்ளன. இதுகுறித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கும் வகையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய பயிற்சி வகுப்பில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், கறம்பக்குடி, மணமேல்குடி, கந்தர்வக்கோட்டை, குன்றாண்டார்கோவில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மீதமுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளவர்களுக்கு வருகின்ற 25.01.2020 அன்று 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 

இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொரு ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களும் தாங்கள் பதவி வகிக்கும் காலங்களில் பொது மக்களின் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் பேசினார். 

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இப்பயிற்சியில் ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பயிற்சி கையேட்டினை வழங்கினார்கள்.இப்பயிற்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலமுரளி, ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments