CAA,NRC,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக குடியரசு தின கிராம சபை கூட்டங்களில் தீர்மான நிறைவேற்றுக ! - GPM மீடியா அறிக்கை



2020 ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினம் நாடெங்கிலும் கொண்டாடப்பட உள்ளது.

இந்நாளில் ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்தி முக்கிய தீர்மாணங்கள் எடுக்கப்படுவது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் கட்டமைக்கப்படாத காரணத்தால் சில தீர்மானங்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் முடிக்கப்பட்டு கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் செயல் வடிவம் பெற்று விட்டன.

கிராம பஞ்சாயத்துகள் சார்பில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒப்புதலோடு அதிகாரிகள் முன்னிலையில் நடத்துவது வழக்கம்.

இச்சபையினால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்களை உரிய இலாக்காவுக்கு அதிகாரிகள் அனுப்பி வைப்பர்.

அந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கைகள் எடுப்பது என்பது, ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு ஒப்பாக கருதப்படும் அந்தஸ்த்தை பெற்றதாகும்.

இதனால் அங்கு நிறைவேற்றிய தீர்மானங்களில் 80 சதவீதம் செயல் முறைக்கு வந்துள்ளன.

எனவே நமதூர் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மற்றும் நமது ஊரை ஒட்டியுள்ள மீமிசல், பொன்னமங்கலம், கோட்டைப்பட்டிணம், அம்மாப்பட்டினம், கிருஷ்ணாஜிப்பட்டினம், கட்டுமாவடி மற்றும் உள்ளிட்ட கிராம சபை கூட்டங்களில் மக்கள் வெகுவாக கலந்துக்கொண்டு CAA,NRC,NPR போன்ற கொடிய சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என GPM மீடியாவின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இதற்காக கிராம பஞ்சாயத்து கவுன்சிலர்கள் முன்னதாகவே இதுகுறித்த திட்டமிடலை வகுத்துகொள்ள வேண்டபடுகிறது.

எனவே ஈழ தமிழர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழின விரோத செயலில் இறங்கியுள்ள இந்த பாசிச பாஜக அரசை எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றி,இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் சண்டாளர்களுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்.

தாய் தமிழ் உறவாய் … இணைந்து வாழ்வோம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments