வேலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் "NRC,CAA,NPR எதிர்ப்பு மாநாடு"



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி19,2020 ஞாயிற்றுக்கிழமை வேலூரில் NRC-CAA-NPR எதிர்ப்பு மாநாட்டினை மனிதநேய மக்கள் கட்சி நடத்தியது.

இந்த மாநாடு வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மத் தலைமையில் நடைப்பெற்றது.வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் நசீர் அஹமத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 


இதில் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா, மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன்,மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபுதீன்,தமுமுக மாநில செயலாளர் சலீமுல்லாகான், தமுமுக மமக மாநில நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி,திமுக பொருளாளர் துரைமுருகன்,மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது,விசிக பொதுச் செயலாளர் இரவிக்குமார் MP, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,பெங்களூரு ஜாமிஆ மஸ்ஜித் கதீப் ஷேக் மக்சூத் இம்ரான் ரஷாதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


தமுமுக தலைமை கழக பேச்சாளர் ஓசூர் நவ்ஷாத் உருதுவிலும்,சமூகநீதி மாணவர் இயக்க மாநில துணைச் செயலாளர் குர்ஷித் தமிழிலும் எழுச்சி முழக்கங்களை எழுப்பினர்.


இறுதியாக மாநாட்டின் தீர்மானங்களை இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநில துணை செயலாளர் CK சனாவுல்லா வாசித்தார்.தமுமுக மாவட்ட செயலாளர் வேலூர் ஆசாத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.









கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments