சந்திர கிரகண தொழுகை அறிவிப்பு.! TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..!இன்ஷா அல்லாஹ் இன்று 10.01.2020 இரவு 10.37 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2.42 மணி வரை சந்திர கிரகணம்  நீடிக்கும் என்று தெரிவிக்கின்றனர்.


கிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்:

எந்த மனிதனின் இறப்புக்காகவும் சூரியகிரகணமும் சந்திரகிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எனவே, அவற்றை நீங்கள் கண்டால் எழுந்து,தொழுங்கள்.(புகாரி 1041, முஸ்லிம் 1670)

இன்ஷா அல்லாஹ் நபி மொழி அடிப்படையில் நமது பகுதியில் சந்திர கிரகணம் தென்பட்டால் நமது  கோபாலப்பட்டிணம் தவ்ஹீத் மர்க்கஸில் இரவு 11.00 மணிக்கு கிரகணத் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன்  கேட்டுக் கொள்கிறோம். 

பெண்களுக்கும் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

என்றும் மர்க்கபணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலப்பட்டிணம்(கிளை),
புதுக்கோட்டை மாவட்டம்.

தகவல்: அப்துல் ரசாக்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments