ரே‌ஷன் கடைகளில் இன்று முதல் வருகிற 13-ந் தேதி வரை ரூ.1000 ரொக்கம்-பொங்கல்பரிசு விநியோகம்..!புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசினை இன்று 09.01.2020 முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பெற்று கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:


புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் , 2 அடி நீள கரும்புத்துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கத்தொகை ரூ.1000 அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் 21.11.2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. 

05.01.2020 அன்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருடன் பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 09.01.2020 அன்று தொடங்கி 12.01.2020 வரையிலும், விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13.01.2020 அன்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வழங்கப்படும். 

மேலும், நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அந்தந்த நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பகுதி வாரியாக வழங்கப்படும். அதற்கான விவரப்பட்டியல் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் அறிவிப்பாக தெரிவிக்கப்படும். அதன்படி, குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்கள் ஏதுமிருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுபாட்டு அறை - 04322-221624, 04322- 221625 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments