108, ஆம்புலன்ஸ் ஊர்திக்கு மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கு நேர்முக தேர்வு 15ம் தேதி நடக்கிறது



108 ஆம்புலன்ஸ் ஊர்திக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கு நேர்முக தேர்வு வரும் 15ம் தேதி நடக்கிறது. இதில் தகுதியானோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்ததாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு நேர்முக தேர்வு முகாம் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி பழைய கலையரங்கத்தில் வரும் 15ம் தேதி நடக்கிறது. இதில் தேர்வு பெற்றவர்கள் தமிழகத்தில் எந்த பகுதியிலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள். 12 மணி நேரம் இரவு பகல் என சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும்.

மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி நர்சிங் விலங்கியல், தாவரவியல், மைக்ரோ பயாலஜி அல்லது ஜிஎன்எம் படித்திருக்க வேண்டும் அல்லது ஏஎன்எம் அல்லது டிஎன்ஏ, டிஎம்எல்டி 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் அல்லது டி.பார்ம் 3 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். 19 வயதுக்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மருத்துவ உதவி பயிற்சியாளர்களுக்கு இ.எம்.டி டெக்னீசியன் மற்றும் டெக்னீசியன் பயிற்சிக்குமான தகுதிகள் ஓராண்டு சான்றிதழ் படிப்பை அரசு மருத்துவக்கல்லூரியில் படித்திருக்க வேண்டும். 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.


இவர்களுக்கு எழுத்து தேர்வு மருத்துவ நேர்முக உடற்கூறியல், முதலுதவி பணி தொடர்பாகவும் மற்றும் மனிதவள துறையின் நேர்முக தேர்வுகளும் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி மருத்துவமனை ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கலந்து கொள்ளலாம். மருத்துவ உதவியாளர் சம்பளம் ரூ.13,760 ஆகும். ஓட்டுனர் பணிக்கு ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முக தேர்வன்று 24 வயதிற்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ க்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டு முடிந்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சம்பளம் ரூ.13,265 ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments