முத்துப்பேட்டையில் நடைபெற்ற CAA-NRC-NPR எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி & கருப்பு சட்டை அணிந்து போராட்டம்..!!



குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நடத்திய CAA-NRC-NPR எதிர்த்து கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் மற்றும் கருப்பு சட்டை அணிந்து நேற்று திங்கள்கிழமை (10-02-2020) முத்துப்பேட்டை நகர் முழுவதும் வீடுகளிலும் கடைகளிலும் கருப்பு கொடிகள் மற்றும் கருப்பு சட்டை அணிந்து எதிர்த்து போராட்டம் செய்தனர். 


முத்துப்பேட்டை ஆசாத் நகா், ரஹ்மத் நகா், திருத்துறைப்பூண்டி சாலை, நியூபஜாா், பட்டுக்கோட்டை சாலை, பங்களாவாசல், பெரியக்கடை தெரு, பேட்டை ரோடு, குத்பா பள்ளி தெரு, மரைக்காயா் தெரு, முகைதீன் பள்ளி தெரு, எஸ்கேஎம் தெரு, தெற்கு தெரு, மஜிதியா தெரு, புதுக்குடியிருப்பு, ஜமாலியாதெரு, புதுத்தெரு, எஸ்பிகேஎம் தோட்டம், குண்டாங்குளம் தெரு, செக்கடி தெரு என இஸ்லாமியா்கள் அதிகளவில் வசிக்கும் பல்வேறு பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், பல்வேறு பகுதியில் சாலையின் குறுக்கே பெரியளவில் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தன.

இதேபோல், இஸ்லாமியா்கள் சட்டையில் கருப்புப் பட்டை அணிந்தும் எதிா்ப்பு தெரிவித்தனா். பேட்ஜ் அணிந்து இருந்தனா்







கருப்பு கொடி பறக்கட்டும் !!! கருப்பு சட்டம் நீக்கட்டும் !!!
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments