பெரியகுளம் ஷாஹீன்பாக் 13-வது நாளாக தொடரும் போராட்டம்.! (புகைப்படங்கள்)குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து அதை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


தமிழகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம், வத்தலகுண்டு பகுதியில் உள்ள ரகமத் நகர் பள்ளிவாசல் அருகில் கடந்த 11.02.2020-ம் தேதி ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 23.02.2020 13-வது நாளாக தொடர்கின்றது.


இந்த போராட்டத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷமிட்டு வருகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments