புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கட்டுமாவடியில் மீனவர் வலையில் 4 அடி நீளமும், 6 கிலோ எடையும் கொண்ட அஞ்சாலை விஷப் பாம்பு சிக்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் (25), ராஜநாயகம் மகன் வினோத் (23) ஆகிய இரு மீனவர்களும் கட்டுமாவடி இராமநாதசுவாமி கோயில் கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய வலையில் மிகப் பெரிய அரிய வகை மீன் சிக்கியது. இந்த மீனை பார்க்கும் போது சற்று வித்தியாசமாக இருந்துள்ளது. வலையிலிருந்து எடுத்து பார்த்தபோது இது அதிக விஷத்தன்மை வாய்ந்த அஞ்சாலை பாம்பு என கண்டறியப்பட்டது.
இந்தப் பாம்பின் தலைப்பகுதி பெரியதாகவும், 4 அடி நீளமும், 6 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. உடல் முழுவதும் புள்ளி புள்ளியாக இருந்தது. இந்த பாம்பு கூர்மையான மேலும் கீழும் என 4 பற்களை கொண்டது. இது கடித்தால் சதை பகுதியை பிரித்து எடுத்து விடும். இந்தப் பாம்பு கடித்தால் உடனடியாக மயக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என மீனவர்கள் தெரிவித்தனர். ஆழம் குறைவான பகுதியில் நடமாடும் இந்த பாம்பு வகை அதிகமாக அலை உள்ள கடல்களில் மட்டுமே காணப்படும். ஆனால் தற்போது கட்டுமாவடி கடல் பகுதியில் கரையோர பகுதியில் இருந்தது மீனவர்களை அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதேபோன்று சிறிய வகை அஞ்சாலை பாம்புகளும் கரை பகுதியில் சில நேரங்களில் தென்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். இந்தப் பாம்பை பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து சென்றனர். பிறகு அந்த பாம்பைக் கொன்று கரையோர பகுதியில் புதைத்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.