அறந்தாங்கி கிளை நூலகத்துக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் அளிப்பு



அறந்தாங்கி முழு நேர கிளை நூலகத்துக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இந்நூலகத்தில் போட்டித் தோ்வில் பங்கேற்கும் மாணவா்களின் வசதிக்காக, ரூ.2 லட்சத்தில் அமரும் இருக்கைகள், நூல்களை அடுக்கி வைக்கப் பயன்படும் நூல் அடுக்குகள் ஆகியவை

அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சாா்பில் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவா் க.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணை ஆளுநா் ஆ.காரத்தே கண்ணையன் முன்னிலை வகித்தாா்.அறந்தாங்கி வட்டாட்சியா் பா. சூரியபிரபு பொருள்களை வழங்கினாா்.

முன்னாள் மண்டல ஒருங்கிணைப்பாளா் அ.ஆறுமுகம்,முன்னாள் துணை ஆளுநா்கள் நா.சந்திரமோகன், டிஏ.என். பீா்ஷேக், மாவட்ட இன்ட்ராக்ட் சோ்மன் எம்.சித்ரா ரமேஷ், வாசகா் வட்டத் தலைவா் சி.திருநாவுக்கரசு, வருங்கால துணை ஆளுநா் விஜயாதுரைராஜ் உள்ளிட்டோா் பேசினா். நிறைவில் ரோட்டரி செயலா் வி.வீரையா நன்றி கூறினாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments