மீமிசலில் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி.!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மீமிசல் ஊராட்சி மன்றம் மற்றும் மீமிசல் காவல் துறை சார்பில் நேற்று 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் மீமிசல் காவல் துறை ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், விபத்தில்லா பயணம் மேற்கொள்ளுதல், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுதல், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள், குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பேரணி துவங்கப்பட்டது. 

தலைக்கவசம் அணிந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் மீமிசல் பாரத ஸ்டேட் வங்கி அருகில் இருந்து தொடங்கி கிழக்கு கடற்கரை சாலை வீரமாகாளி அம்மன் கோயில் (கோபாலப்பட்டிணம் நுழைவாயில்) வரை ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சியில் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்: GPM மீடியா குழு
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments