திணறியது புதுக்கோட்டை..! (புகைப்படங்கள்)குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழா அரசு நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் .


என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இன்று 19.02.2020 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் பல லட்சம் மக்கள் கலந்துகொண்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்களால் இன்று தமிழகமே ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments