சிக்னல் நிற்கும்போது சிலர் ஹாரன் அடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். சிக்னலில் பச்சை விளக்கு எரிய 10, 15 வினாடிகள் இருக்கும்போதே அவர்கள் இந்த சத்தத்தை எழுப்புவார்கள்.
அவர்களுக்காகவே தற்போது மும்பை போலிசார் புதிய முறையை சிக்னல் விளக்குகளில் புகுந்தியுள்ளார்கள். அதன்படி, தேவையில்லாமல் சாலையில் ஹாரன் அடித்தால் அதனுடைய நேரம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது போல் செட்டிங்கை மாற்றி வைத்துள்ளார்கள்.
Horn not okay, please!— Mumbai Police (@MumbaiPolice) January 31, 2020
Find out how the @MumbaiPolice hit the mute button on #Mumbai’s reckless honkers. #HonkResponsibly pic.twitter.com/BAGL4iXiPH
தி பினிஷிங் சிக்னல் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, டிராபிக் சிக்னல் உடன் புதிய டெசிபெல் கருவிகளை போலிசார் பொருத்தியுள்ளனர். அதன்படி சிவப்பு விளக்கு எரிவதற்கு முன் யாராவது சாலையில் காத்திருப்பவர்கள் ஒலி எழுப்பினால் மீண்டும் சிவப்பு விளக்கு முதலில் இருந்து எரிய ஆரம்பிக்கும். இதனால் மீண்டும் சாலையில் நிற்பவர்கள் முதலில் இருந்து காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த திட்டத்தால் தற்போது சாலையில் யாரும் ஒலி எழுப்புவதில்லை என்று மும்பை போக்குவரத்து காவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.