முக்கிய அறிவிப்பு: அம்மாப்பட்டினத்தில் ஷாகின் பாக் தொடர் இருப்பு போராட்டம்கோபாலப்பட்டிணம் உள்ளூர் வாழ் உறவுகள் மற்றும் சுற்றுவட்டார பகுதி தொப்புள் கொடி உறவுகள் கவனத்திற்கு. அம்மாப்பட்டினத்தில் தொடர் இருப்பு போராட்டம்.


மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத , குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், அம்மாப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில், பேருந்து நிலையம் அருகே CAA,NRC,NPR சட்டத்தை திரும்ப பெற வேண்டி இன்று 17-02-2020 திங்கள்கிழமை காலை முதல் தொடர் இருப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

எனவே நமது ஊர் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு போராட்ட குழு & கோபாலப்பட்டிணம் மீடியா (GPM மீடியா) சார்பாக கேட்டுக் கொள்கிறோம். கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments