டெல்லியில் மசூதிக்கு தீ வைத்து கண்மூடித்தனமாக சூறையாடிய வன்முறை கும்பல் !டெல்லி வன்முறையின்போது மசூதி மீது தீ வைத்ததோடு, மசூதியை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர் வன்முறையாளர்கள்.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்த வன்முறையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வன்முறையாளர்கள் மசூதி மீது தீ வைத்துள்ளது, மேலும் மசூதி மினாராவை இடித்து, ஒலிபெருக்கியையும் தூக்கி வீசுவதோடு, இந்துத்வா கொடியை மசூதியில் ஏந்தி நிற்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் குஜராத் பாணியில் கலவரம் ஏற்படுத்த முயல்கிறார்கள் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments