நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கடமைக்கு நடந்து முடிந்த சிறப்பு கிராமசபை கூட்டம்..!நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி விழிப்புணா்வு சம்மந்தமாக சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று 25.02.2020 செய்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடைக்கு ஏற்படும் கோமாரிநோய் தடுப்பு முறைகள் மற்றும் கோமாரிநோய் தடுப்பூசி குறித்து சிறப்பு கிராமசபையை 25.02.2020 அன்று நடத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் சார்பில் கடந்த 20.02.2020 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றறிக்கை  அனுப்பப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரிநோய் தடுப்பு குறித்த கூட்டப் பொருளினை வைத்து தொடர்புடைய கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களுடன் இணைந்து 25.02.2020 அன்று காலை 11.00 மணியளவில் சிறப்பு கிராம சபை கூட்டத்தினை நடத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால் நமது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல் எதுவும் நடந்தாக தெரியவில்லை. சிறப்பு கிராமசபை பற்றி ஊராட்சி மன்ற தனி அலுவலரிடம் விசாரித்த போது இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவரே கலந்து கொள்ளவில்லை என்றும் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது என்றும் தகவல் கூறினார்.

இங்கு சில கேள்விகள் எழுகிறது. இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் எத்துனை வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.? பொதுமக்கள் எத்துனை நபர்கள் கலந்து கொண்டார்கள்.? கால்நடை அலுவலர் கலந்து கொண்டாரா.? எப்பொழுது அறிவிப்பு செய்யப்பட்டது..? போன்ற கேள்விகள் எழும்புகின்றது.

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை பொறுத்த வரையில் கிராமசபையாக இருக்கட்டும் அல்லது சிறப்பு கிராமசபையாக இருக்கட்டும் சரியான முறையில் முன் அறிவிப்புகள் செய்யப்படுவதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் ஊராட்சி மன்ற தனி செயலாளர் அவர்கள் அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையின் படி சுவரொட்டி மற்றும் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடந்த ஒருவருட காலமாக GPM மீடியா கிராமசபை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு கிராமசபை நடத்துவது குறித்த அறிக்கை

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments