நமது ஊர் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அ. சாதிக் பாட்ஷா அவர்களின் பெரிய மாமனார் நாகப்பட்டினம் மாவட்டம், பொறையார் அருகே பெரிய கூத்தூரில் வசித்து வரும் முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி..
இவர் அன்றாடம் வேலை செய்து அவரது குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு தஞ்சாவூர் அனு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் ஆறு அடைப்புகள் உள்ளதை கண்டறிந்தனர். எனவே உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முஜிபு ரஹ்மான் அவர்களிடம் அம்மா காப்பீடு அட்டை உள்ளது. ஆனால் அந்த காப்பீடு திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட அளவே அரசிடம் இருந்து பெறமுடியும் என்றும் அது போக கூடுதலாக ஒன்றரை லட்சம் தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அன்றாட வேலை செய்து வந்த நிலையில் உடனடியாக இவ்வளவு பெரிய தொகையை அவர்களால் திரட்ட முடியாத காரணத்தால் உங்களின் உதவியை நாடி இதை பதிவிடுகிறோம்.
ஆகவே இந்த பதிவை பார்க்கக்கூடிய உதவுவதற்கு எண்ணம் கொண்ட அன்பு உள்ளங்கள் உதவி செய்திட வேண்டி இந்த பதிவை உங்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம். அவ்வாறு அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து உதவிட எண்ணுபவர்கள் கீழே உள்ள வங்கி கணக்கிற்கோ அல்லது நாம் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு உதவிடுமாறு GPM மீடியா சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
ஒரு மனிதரை வாழவைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் !
![]() |
மருத்துவர் அறிக்கை (Report)
|
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்:
+918526557121
வங்கி தகவல்:
M.APROJA
A/C.NO.104101000013751
INDIAN OVERSEAS BANK
THIRUKKALACHERY MAIN BRANCH
IFSC CODE:IOBA0001041
தகவல்:
அ.சாதிக் பாட்ஷா,கோபாலப்பட்டிணம்
https://wa.me/966571120924 (Whatsapp Only)
தர்மம் பற்றிய இஸ்லாம் கூறுவது:
நீங்கள் விரும்புவதை செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவன் (அல்குர்ஆன் 3:92).
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும்…. நன்மைதான் எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் 2:215).
☝ அல்லாஹ் சொல்லும் சேதி
5352- حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
قَالَ اللَّهُ أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْك
“ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 5352
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.