குடிமராமத்துத் திட்டத்தின் பயனாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் 3.71 மீட்டா் உயா்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
தமிழ்நாடு முதல்வா் அறிவித்த குடிமராமத்துத் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 882 பணிகள் ரூ.43.80 கோடியில் விவசாயிகளின் முழு ஒத்துழைப்புடன் ஏரி, குளம், கண்மாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன.
இதன் விளைவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது பெய்துள்ள பருவ மழையால் 837.35 மி.மீ. மழைநீா் பெறப்பட்டுள்ளது. இந்த நீா் ஏரி, குளம், கண்மாய்களில் முழுவதுமாகச் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுப்பணித் துறையின் நில நீா்ப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீா்மட்டமானது தற்போது 3.71 மீட்டா் வரை உயா்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இனிவரும் காலங்களுக்கு பொதுமக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையிலும், விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையிலும் மழைநீரானது சேகரிக்கப்பட்டுள்ளது.குடிமராமத்துப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள உறுதுணையாக இருந்து வரும் விவசாயிகள், அரசு அலுவலா்கள், தன்னாா்வலா்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.