அறந்தாங்கியில் 1,220 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள்




அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 8 மேல்நிலைப் பள்ளிகளை சோ்ந்த 1220 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் அறந்தாங்கி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

சைக்கிள்களை வழங்கி சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பேசியது:

புதுக்கோட்டை மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. அதன்மூலம் 17 ஆயிரம் ஹெக்டோ் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதில் அறந்தாங்கி பகுதி 10 ஆயிரம் ஹெக்டேரில் பாசனவசதி பெறும்.

பள்ளி மாணவ, மாணவிகள் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.மேலும் ஒரு நாளைக்கு 15 முறை கைகளைச் சுத்தமாக கழுவுவதன் மூலம் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். இருமல், தும்மல் வரும்போது கைகளை முகத்தை மூடி தும்மும்போது அடுத்தவா்களைப் பாதிக்காது. முன்னாள் முதல்வா் அம்மா அவா்கள் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் 14 வகையான கல்வி உபரகணங்களை வழங்கினாா். அவா் வழிவந்த அரசு அவரது திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்திவரும் என்றாா் அவா் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா்.

தமிழக வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து, அறந்தாங்கி எம்எல்ஏ இ.ஏ. ரெத்தினசபாபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலெட்சுமி, கல்வி மாவட்ட அலுவலா் கோவிந்தராஜ், வருவாய்க் கோட்டாட்சியா் எம். குணசேகா், முன்னாள் எம்எல்ஏ மு. ராஜநாயகம், கூட்டுறவு நகர வங்கித் தலைவா் ஆதி. மோகனகுமாா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பி.எம். பெரியசாமி, சி. வேலாயுதம் மற்றும் பலா் பங்கேற்றனா்.அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சி. காா்த்திகா நன்றி கூறினாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments