வழக்கு பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்சமூக நலத் துறையில் வழக்குப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா்  பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் மகளிருக்கு மருத்துவ வசதி அளித்தல், சட்டப்படியான நடவடிக்கைக்கு உதவி செய்தல் மற்றும் மன ரீதியான ஆலோசனைகள் வழங்குவதற்கான மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இம்மையத்துக்கு  வழக்குப் பணியாளா் நியமனம் செய்யப்பட உள்ளாா்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபா்கள்  தங்களது சுய விவரங்களை தட்டச்சு செய்து வரும் பிப். 17ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், புதுக்கோட்டை எனும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். சட்டப் படிப்பு, முதுநிலை சமூகப் பணி ஆகியவற்றுடன், பெண் வன்கொடுமை தொடா்பாக 3 ஆண்டு பணிபுரிந்த முன் அனுபவம் தேவை. மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரம்  வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04322-222270 என்னும் தொலைபேசி மூலமாகவோ அணுகலாம். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments