புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு தனி வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன.
சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில், அங்கு கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்ற தமிழர்கள் நாடு திரும்பி கொண்டு உள்ளனர். கல்வி பயில்வதற்காகவும், தொழில்சார்ந்த பணிகளுக்காகவும் சீனாவில் தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 100 பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். அவர்களை விமான நிலையத்தில் உள்ள மருத்துவக்குழுவினர் முழு மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் அறிகுறி ஏதும் இல்லை என்று தெரிந்த பின்பே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து அவர்களை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கண்காணித்து, நாள்தோறும் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் சீனாவில் இருந்து வந்து உள்ள 100 பேரும் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேறக்கூடாது எனவும் சுகாதாரத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு தனி வார்டை மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் திறந்து வைத்தார். கொரோனா வைரஸ் அறி குறியுடன் பாதிக்கப்பட்டு யாரும் சிகிச்சைக்காக வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் இரு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
6 பேர் கொண்ட மருத்துவக்குழு
இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், சீனாவில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 100 பேர் இதுவரையில் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை. எனினும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அடிப்படையில் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு தனி வார்டுகள் 2 தொடங்கப்பட்டு உள்ளது.
யாரேனும் அந்த காய்ச்சலின் அறிகுறியுடன் இங்கு அனுமதிக்கப்பட்டால் 6 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண் காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். கொரோனா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.