அவசர அறிவிப்பு: உயிரிழப்புகளின் எதிரொலி! ‘Coldbest PC’ இருமல் மருந்துக்கு தடை!



குழந்தைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சுப்பொருள் உள்ளதால், Coldbest-PC எனப்படும் இருமல் சிரப் மருந்தை விநியோகிக்கவோ, விற்கவோ, வாங்கவோ கூடாது என அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், Coldbest PC எனப்படும் இருமல் சிரப் மருந்தை தயாரிக்கிறது. இந்த மருந்தில் உள்ள Diethylene Glycol என்ற நச்சுப்பொருள், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 9 சிறார்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, ஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-கஷ்மீர் மருந்து கட்டுப்பாட்டு துறை அனுப்பிய சுற்றறிக்கை, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து இணை இயக்குனர்களுக்கும், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்திற்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Coldbest PC என்ற இருமல் சிரப் மருந்தில், Diethylene glycol என்ற நச்சு பொருள் இருப்பதால், இந்த மருந்தை  வாங்கவோ, விற்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source:https://timesofindia.indiatimes.com/city/dehradun/drug-dept-bans-sale-of-cold-best-pc-syrup/articleshow/74232252.cms

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/coldbest-pc

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments