கோபாலப்பட்டிணத்தில் நடைபெறவுள்ள தர்ணா போராட்டத்திற்கு பொதுநல அமைப்புகள் மற்றும் ஜமாத்தார்களுக்கு அழைப்பு விடுத்த GPM TNTJ கிளை.!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணத்தில் 27.02.2020 வியாழக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலபட்டிணம் கிளை சார்பாக


கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் 29.02.2020 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள மதரீதியாக பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி மாபெரும் தர்ணா போராட்டத்திற்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


கோபாலபட்டிணம் சுன்னத் வல் ஜமாஅத், மீமிசல் சுன்னத் வல் ஜமாஅத், GPMமக்கள் மேடை, GPM பொதுநல சேவை, மீமிசல் வர்த்தக சங்கம் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து நமது ஊரில் 29.02.2020 நடைபெறக்கூடிய தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்: கோபாலப்பட்டிணம் அப்துல் ரசாக்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments