கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உம்ரா பயணத்திற்கு சவுதி அரேபியா தடை.!கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாட்டு பயணிகள் புனித பயணமாக வருவதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவால் சென்னை விமான நிலையத்தில் 250 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.


சீனாவில் பரவி உள்ள ‘கொரோனா’ வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன.

சவுதி அரேபியா அரசும் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது.

இந்தநிலையில் சவுதியில் உள்ள மக்கா, மதினாவுக்கு உம்ரா பயணத்துக்கு செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 பேர் நேற்று மதியம் 12.15 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்ய சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.

ஆனால் அவர்கள் சவுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாட்டு பயணிகள் புனித பயணமாக வருவதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக மதினாவுக்கு செல்ல முடியாமல் 250 பேரும் சென்னை விமான நிலையத்தில் தவித்தபடி நின்றனர். இதனால் சர்வதேச விமான நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments