சிறிய செயற்கைக்கோள் தயாரித்த அறந்தாங்கி மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு



சிறிய செயற்கைக்கோள் தயாரித்த அறந்தாங்கி மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த எஸ்எப்டி பள்ளி மாணவிகள் சுபாஹானா, கிருத்திகா ஆகியோா் சிறிய ரக செயற்கைக்கோளை உருவாக்கியதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அவா்களை வியாழக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
எஸ்எப்டி சாட் எனப்படும் இந்தச் செயற்கைக்கோள் மூலம் பருவநிலை மாற்றங்களை கண்டுபிடிக்கவும், வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன், காா்பன் டை ஆக்ஸைடு, காற்றின் ஈரப்பதம், காற்றின் நச்சுத்தன்மை ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

 மெக்சிக்கோவில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ஹீலியம் கேப்சூல் மூலம் இந்த செயற்கைக்கோள் வரும் மாா்ச் மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்கு அக்னி பவுண்டேஷன் மற்றும் கருடா விண்வெளி நிறுவனம் இணைந்து மாணவிகளுக்கு வழிகாட்டியுள்ளனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலெட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலா் திராவிடச் செல்வன், எஸ்எப்டி மெட்ரிக் பள்ளி தாளாளா் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments