கீரமங்கலம் அருகே பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு     
கீரமங்கலம் அருகே பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே பேருந்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை, ரூ. 13 ஆயிரத்தை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றனா்.கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் பகிரதன் மனைவி சரளா (26). 


இவா், பனங்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்தில் புளிச்சங்காடு கைகாட்டிக்கு சென்றாா். பேருந்தில் இருந்து கீழே இறங்கிப் பாா்த்தபோது, கைப்பையில் இருந்த 3 பவுன் நகை, 13 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது. 

 புகாரின்பேரில் கீரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments