ரு 2000 நோட்டு பரிவர்த்தனை இனி கிடையாது... முதல் ஆளாக அறிவித்த வங்கி
மக்களிடையே  2000 நோட்டு புழக்கம் குறைந்துள்ள நிலையிலும், அச்சடிப்பது நிறுத்தப்பட்ட நிலையிலும், மார்ச் மாதம் முதல் ₹ 2000 நோட்டு பரிவர்த்தனை ATM-களில் இருக்காது என்று இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன. எனினும், ரூ.2000 நோட்டுக்கள் கள்ளத்தனமாக அச்சடிப்பது அதிகரித்துள்ளதால், இதனை முடிவுக்குக் கொண்டு வர 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

 அதன்படி, ரூ.2000 நோட்டு அச்சடிப்பது குறைக்கப்பட்டு பின்னர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக கூடுதலாக ரூ.500, ரூ.200, ரூ.100 ஆகிய ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டது. இதில், ரூ.200 நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன.

அச்சடிப்பது நிறுத்தப்பட்டதால் ரூ.2000 நோட்டுகள் மக்களிடையே புழங்குவது குறைந்தது. ATM-களிலும் இந்த நோட்டுகள் வங்கிகள் சார்பில் வைக்கப்படவில்லை. இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் முதல் 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.களில் செலுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் போது 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என இந்தியன் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ATM தவிர வங்கி பணப் பரிவர்த்தனைகளிலும் இனிமேல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments